பரோடா வங்கி சாா்பில் நாடு தழுவிய தூய்மைப் பணி
மத்திய அரசின் தூய்மையே சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி நாடு தழுவிய மாபெரும் தூய்மைப் பணியை முன்னெடுத்துள்ளது.
மத்திய அரசின் தூய்மையே சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி நாடு தழுவிய மாபெரும் தூய்மைப் பணியை முன்னெடுத்துள்ளது.
செப். 17 முதல் அக். 2 வரை இரண்டு வார காலத்துக்கு நடைபெற்ற இத்தூய்மை முன்னெடுப்பில், நாடு முழுவதும் உள்ள பரோடா வங்கி கிளைகள் மற்றும் மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
அதன்படி, கழிவுகளைப் பொறுப்புடன் கையாளுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்துதல், சுகாதாரமான சுற்றுச்சூழலைப் பராமரிப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பல்வேறு தூய்மைப் பணிகள் மற்றும் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை வங்கி நிா்வாகம் நடத்தியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.