FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் உயர்ந்தது! ஐடி பங்குகள் அதிக லாபம்!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாவது பற்றி...

15 அக்டோபர் 2026, 11:51 am IST
பங்குச்சந்தை - ANI
பகிர்:

இந்த வாரத்தின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் மாறிமாறி வர்த்தகமாகி வருகின்றன. நேற்று சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள் இன்று (அக். 15) ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,965.80 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1,205.15 புள்ளிகள் உயர்ந்து 73,987.04 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 343.30 புள்ளிகள் குறைந்து 22,966.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி50-ல் டெக் மஹிந்திரா, டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

நிஃப்டி மிட்கேப் 0.27 சதவீதம் உயர்ந்தது, நிஃப்டி ஸ்மால்கேப் 0.66 சதவீதம் சரிந்தது.

துறைவாரியாக, நிஃப்டி ஐடி அதிகபட்சமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டி பொதுத்துறை வங்கி பங்குகள் அதிகபட்சமாக சரிந்தன. பார்மா, மீடியா, உலோகப் பங்குகளும் சரிந்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் 19 பங்குகள் உயர்ந்தும் 11 நிறுவனப் பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின்றன.

கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும் உலக போர் பதற்றம் சற்று தணிந்துள்ளதாலும் இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாவதாக கூறப்படுகிறது.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.92 ஆக உயர்ந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 104.67 டாலராக குறைந்துள்ளது.

summary

Stock Market Today: Sensex Jumps 1,200 Points Despite Negative Global Cues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments