ஆப்பிளின் முதல் ஃபோல்ட் ஐபோன் வெளியானது! விலை எவ்வளவு?
ஆப்பிளின் முதல் ஃபோல்ட் ’ஐபோன் டியோ’ வெளியிடப்பட்டது பற்றி...
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஃபோல்ட் போனான ‘ஐபோன் டியோ’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதுமே அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், ஐபோன் 18 சீர்ஸ் போன்கள், ஏர்பாட்ஸ் 5 மற்றும் புதிய வாட்ச் சீரிஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், இந்த நிகழ்வில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஐபோன் டியோ’ ஃபோல்ட் போனும் அறிமுகம் செய்யப்பட்டது.
விலை எவ்வளவு?
இந்தியாவில் ‘ஐபோன் டியோ’ போனுக்கான முன்பதிவு வருகின்ற அக். 16 முதல் தொடங்குகிறது. அக். 23 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
256 256 ஜி.பி. சேமிப்பு திறன் கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ. 2,99,900-க்கும், 512 ஜி.பி. மாடல் ரூ. 3,24,900-க்கும், ஒரு டிபி மாடல் ரூ. 3,74,900-க்கும், 2 டி.பி. மாடல் ரூ. 4,49,900-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன. ஸ்டார் ஒயிட், நைட் ஸ்கை ஆகிய 2 வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
இதேபோல், ஐபோன் 18 ப்ரோ 256 ஜி.பி. மாடல் ரூ. 1,64,900-க்கும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 256 ஜி.பி. மாடல் ரூ. 1,79,900-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
சிறப்பம்சங்கள்
ஐபோன் டியோவில் 7.6 அங்குல ‘சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர்’ ஃபோல்ட் ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. ஸ்க்ரீனில் மடிக்கக்கூடிய கோடு தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவும், 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமராவும் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் ‘சென்டர் ஸ்டேஜ்’ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 44 மணிநேரம் வரை உபயோகிக்கலாம் எனக் கூறப்படுகிறது. 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 5 மணிநேரம் உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இ-சிம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
Apple's first foldable iPhone Duo has been released! How much does it cost?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.