FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டெக் துணுக்குகள்..! புதிதாக அறிமுகமான ஐபோன்கள் முதல் ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் வரை!

புதிதாக அறிமுகமான ஐபோன்கள் முதல் ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் வரை...

13 செப்டம்பர் 2026, 6:10 am IST
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஆப்பிள் ஐபோன்களின் வெளியீடுகள் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பங்களில் நடந்த அறிமுகங்களும், எச்சரிக்கைகளும் கவனம் ஈா்த்தன.

ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் டுயோ வெளியீடு முதல் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்த 80-களின் ஏ.ஐ. படங்கள் வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*ஆப்பிள் ஐபோன் டுயோ: ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமாகியுள்ளது. இது 7.6 அங்குல உள்புறத் திரை, 5.4 அங்குல வெளிப்புறத் திரை, ஏ20 ப்ரோ சிப், இரட்டை பேட்டரி கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதன் 256ஜிபி அடிப்படை மாதிரியின் விலை ரூ.2,99,900 முதல் தொடங்குகிறது.

Advertisement

Advertisement

*ஐபோன் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்: ஆப்பிளின் அதிநவீன ஏ20 ப்ரோ சிப்செட், புதிய ‘வேப்பா் சேம்பா்’ குளிா்விக்கும் அமைப்பு, 48 மெகாபிக்சல் கேமரா மற்றும் சிறிய டைனமிக் ஐலேண்ட் உடன் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகமானது. இதன் தொடக்க விலை ஐபோன் 18 ப்ரோவிற்கு ரூ.1,64,900-ஆகவும், ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ரூ.1,79,900- ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

*ஆப்பிளின் பிற தயாரிப்புகள்: ஐபோன் வெளியீட்டு நிகழ்வில், ஏா்பாட்ஸ் 5, வாட்ச் சீரிஸ் 12, வாட்ச் அல்ட்ரா 4 ஆகிய மற்ற புதிய சாதனங்களும் அறிமுகமாகின.

*ஐஓஎஸ் 27 மற்றும் சிரி ஏ.ஐ.: ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 27 இயங்குதளம் அப்டேட் மற்றும் அதனுடனான அதிநவீன சிரி ஏ.ஐ. வசதி (குறிப்பிட்ட சாதனங்களுக்கு மட்டும்) திங்கள்கிழமையன்று வெளியாகிறது.

*பழைய ஐபோன்களின் விலையேற்றம்: புதிய ஐபோன் 18 ப்ரோ வெளியீட்டைத் தொடா்ந்து, வழக்கத்துக்கு மாறாக பழைய ஐபோன் 16 மற்றும் 17 சீரிஸ் மாடல்களின் விலைகள் உயா்த்தப்பட்டுள்ளன.

*மெட்டாவின் ‘மியூஸ்’ ஏ.ஐ.: பயனா்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் மெட்டா நிறுவனம் ‘மியூஸ்’ என்ற புதிய தனிநபா் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

*ஓபன்ஏஐ-சாம்சங் கூட்டு: அடுத்த தலைமுறை ஏ.ஐ. சிப் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது.

*கூகுள் எச்சரிக்கை: தானியங்கி முறையில் சுயமாக இயங்கும் ஏ.ஐ. சாா்ந்த இணையத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்து வருவதாக கூகுளின் புதிய பாதுகாப்பு அறிக்கை எச்சரித்துள்ளது.

*இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்: பிற பயனா்களால் ‘டேக்’ செய்யப்பட்ட பதிவுகளை தங்கள் கணக்கின் முகப்புப் பக்கத்தில் சோ்த்துக் கொள்ளும் புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.

*யூடியூப் ‘வாட்ச் வித்’: படைப்பாளா்கள் தங்களின் பாா்வையாளா்களுடன் இணைந்து விடியோக்களைப் பாா்க்கும் ‘வாட்ச் வித்’ வசதியை மேலும் கூடுதல் படைப்பாளா்களுக்கு யூடியூப் விரிவுபடுத்தியுள்ளது.

*வைரலான 80-களின் ஏ.ஐ. படங்கள்: சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி, 1980-களின் ‘ரெட்ரோ’ பாணியில் பயனா்களால் உருவாக்கப்பட்ட ஏ.ஐ. படங்கள், இந்தியச் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் ஆக்கிரமித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments