FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐபோன் 18 விற்பனை தொடக்கம்... ஆப்பிள் ஸ்டோர்களில் அதிகாலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம்!

ஐபோன் 18 விற்பனை தொடங்கியதால், ஆப்பிள் ஸ்டோர்களில் அலைமோதும் கூட்டத்தைப் பற்றி...

18 செப்டம்பர் 2026, 9:44 am IST
ஆப்பிள் ஸ்டோர்களில் அதிகாலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம்.
பகிர்:

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ள நிலையில், ஆப்பிள் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை (செப். 18) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ஆப்பிள் 18 சீரிஸை வாங்க, ஆப்பிள் போன் பிரியர்கள் காலை முதலே ஆப்பிள் ஸ்டோர்களில் குவியத்தொடங்கினர். தலைநகர் தில்லி, நொய்டா, மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள முக்கிய கடைகளில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அலைமோதியது.

Advertisement

Advertisement

ஐபோன் 18 ப்ரோவின் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் ஆரம்ப விலை ரூ. 1,64,900 ஆகவும், 512 ஜிபி மாடலின் விலை ரூ. 1,89,900 ஆகவும், 1 டிபி மாடலின் விலை ரூ. 2,39,900 ஆகவும் உள்ளது. டாப்-எண்ட் 2 டிபி வேரியன்ட்டின் விலை ரூ. 3,14,900.

இதற்கிடையில், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ. 1,79,900.

இந்த இரண்டு மாடல்களும் பர்கண்டி ரெட், கிளேசியர், சில்வர் மற்றும் கருப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன.

ஐபோன் 18 ப்ரோ 6.3-அங்குல திரையையும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 6.9-அங்குல திரையையும் கொண்டுள்ளது.

ஐபோன் 18 ப்ரோ ஒரே சார்ஜில் 24 மணிநேரம் வரையிலும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் சுமார் 30 மணிநேரம் வரையிலும் பேட்டரி தாங்கும் வசதியையும் கொண்டுள்ளது.

The Apple iPhone 18 Pro and iPhone 18 Pro Max are officially on sale in India today, with eager buyers turning up in large numbers outside major Apple outlets across the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments