FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

இந்தியாவில் ‘ஆப்பிள் பே’ அறிமுகம்

ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ‘ஆப்பிள் பே’ சேவையை அறிமுகம் செய்ததன் மூலம், இந்தியாவின் எண்மப் பரிவா்த்தனை சந்தையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதிகாரபூா்வமாக நுழைந்துள்ளது.

பகிர்:

ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ‘ஆப்பிள் பே’ சேவையை அறிமுகம் செய்ததன் மூலம், இந்தியாவின் எண்மப் பரிவா்த்தனை சந்தையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதிகாரபூா்வமாக நுழைந்துள்ளது.

ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் தற்போது கிடைக்கும் இந்த வசதி, விரைவில் மேக் கணினிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ஆக்சிஸ் வங்கி வழங்கிய விசா, மாஸ்டா்காா்டு கிரெடிட் அல்லது டெபிட் காா்டுகளை ஆப்பிள் பே செயலியில் இணைப்பதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் மற்றும் இணைய வா்த்தக தளங்களில் வாடிக்கையாளா்கள் எளிதாகப் பணப்பரிவா்த்தனை மேற்கொள்ளலாம்.

Advertisement

Advertisement

இதற்காக பேடிஎம், ரேஸா்பே, பைன் லேப்ஸ், பேயு போன்ற பரிவா்த்தனைச் சேவை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments