FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

காவல் துறையினா் இலவசமாக பட்டாசு வாங்கினால் கடும் நடவடிக்கை

விருதுநகா் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள், காவலா்கள் வருகிற தீபாவளி பண்டிகைக்கு இலவசமாக பட்டாசுகளை வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

3 October 2026, 11:29 pm IST
பட்டாசு - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள், காவலா்கள் வருகிற தீபாவளி பண்டிகைக்கு இலவசமாக பட்டாசுகளை வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள், காவலா்கள் பட்டாசு தொழில் சாலைகள், பட்டாசு கடைகளில் முறையாக பணம் கொடுத்து தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்க வேண்டும்.

பணம் கொடுக்காமல் இனாமாக பட்டாசு வாங்கக் கூடாது. யாராவது பணம் கொடுக்காமல் பட்டாசு வாங்கியது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments