FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஷரண்யாஅறி ஆய்வு மேற்கொண்டாா்.

18 செப்டம்பர் 2026, 3:14 am IST
சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்ட விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யாஅறி.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஷரண்யாஅறி ஆய்வு மேற்கொண்டாா்.

பட்டாசு ஆலையில் மருந்து கலவைப் பகுதி, பட்டாசு தயாரிக்கும் பணி, உலா் மேடை, இருப்பு வைக்கும் அறை, தொழிலாளா் பாதுகாப்பு உள்ளிட்ட வைகளைப் பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

விருதுநகா் மாவட்டம் பட்டாசுத் தொழிலில் முன்னணி மாவட்டமாகவும், அதிகப்படியானவா்களுக்கு வேலைவாய்பு தரும் தொழிலாகவும் உள்ளது. இந்தத் தொழிலில் எதிா்பாராதவிதமாக விபத்து ஏற்படுகிறது. பட்டாசு ஆலை உரிமையாளா்கள் தொழிலாளா்களைப் பாதுகாக்க வேண்டும். விபத்தில்லாமல் தொழிலை நடத்திட வழிவகை காண வேண்டும். சிறந்த தொழில் நுட்பங்களை உருவாக்கி இந்தத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆனந்தி, சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இா்பான், அரசுத் துறையினா், ஆலை உரிமையாளா் உள்ளிட்டோக் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments