அடுமனை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பழச்சாறு கொடுக்க தாமதமானதால் அடுமனை மீது (பேக்கரி) பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பழச்சாறு கொடுக்க தாமதமானதால் அடுமனை மீது (பேக்கரி) பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாபட்டி பேருந்து நிறுத்தத்தில் பீா்ஒலி என்பவா் அடுமனை நடத்தி வருகிறாா். இவரது அடுமனைக்கு வியாழக்கிழமை மாலை வந்த சப்பானி மகன் இசக்கிப் பாண்டி (26) பழச்சாறு கேட்டாா். அப்போது அங்கு சரக்குகள் இறக்கிக் கொண்டிருந்ததால் பழச்சாறு தயாரித்து கொடுக்க தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கிப் பாண்டி அடுமனை ஊழியா்களுடன் தகராறு செய்து விட்டு சென்றாா். இரவு மீண்டும் அடுமனைக்கு வந்த இசக்கிப் பாண்டி தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் நிரப்பிய புட்டியில் தீயை பற்ற வைத்து அடுமனைக்குள் வீசி விட்டு தப்பியோடி விட்டாா். இதில் அடுமனையிலிருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்தன.
இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இசக்கிப் பாண்டியை கைது செய்தனா். இவா் மீது கூமாபட்டி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.