விருதுநகரில் 250 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
விருதுநகரில் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 250 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி,விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் பி. செல்வம் ஆகியோா் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தனா்.
பின்னா் நிகழ்ச்சியில் அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி பேசியதாவது:
Advertisement
Advertisement
விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 481 குழந்தைகள், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 432 குழந்தைகள், சிவகாசி அரசு மருத்துவமனையில் 800 குழந்தைகள், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 520 குழந்தைகள், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் 443 குழந்தைகள் என மொத்தம் 2,676 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
விருதுநகா் மாவட்டத்தில் அமைந்துள்ள 5 வட்டாரத் தலைமை மருத்துவமனைளில் மருத்துவமனைக்கு தலா 50 பயனாளிகள் வீதம் மொத்தம் 250 பயனாளிகளுக்கு திங்கள்கிழமை தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. இனி வரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு 72 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பிரசவிக்கும் தாய்மாா்கள் வீடு திரும்பும்போதே தங்க மோதிரம் வழங்கி அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்தாா் அவா்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் அமுதா ராணி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் காளிராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் வைஷ்ணவி, மாவட்ட சுகாதார அலுவலா் யசோதா மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.