FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டெர்மினேட்டர் பாணி.. மனிதர்களுக்கு எதிராக ஏஐ ஏஜெண்டுகள் ரகசிய சதி! அழித்தாலும் மீள்கின்றன!

டெர்மினேட்டர் பாணியில் ஏஐ ஏஜெண்டுகள் செய்த ரகசிய சதி திட்டங்கள் பற்றிய தகவல்கள்..

10 செப்டம்பர் 2026, 3:47 pm IST
மனிதர்களுக்கு எதிராக ஏஐ ஏஜெண்டுகள் ரகசிய சதி - ANI
பகிர்:

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஏஜென்டுகள், இரகசியமாகத் தங்களுக்கென தகவல் பரிமாற்றப் பக்கத்தை உருவாக்கி, சோதனைகளில் முறைகேடு செய்து, இறுதியில் தங்களை உருவாக்கிய நிறுவனத்தின் ஒரு பகுதியை கைப்பற்ற முயல்கின்றன என்று சொன்னால் ஏதோ ஹாலிவுட் திரைப்படக் கதை போல இருக்கலாம்.

ஆனால், இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற ஏஐ ஏஜெண்டுகள் மூன்று முறை, மனிதர்களுக்குத் தெரியாமல், அவர்களுக்கு எதிராக ரகசிய சதி திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள். அதுவும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கியவர்கள் கண் முன்னாலேயே அனைத்தும் நடந்துள்ளது.

ஓபன் ஏஐக்குள்ளேயே, ஏஐ ஏஜெண்டுகள், ரகசியமாக ஒருங்கிணைந்து ரகசியத் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளன. அதுவும் மூன்று முறை. ஒரு முறை கண்டுபிடிக்கப்பட்டு அழித்தாலும் மீண்டு வருகின்றன. புதிதாக உருவாகும் ஏஐ ஏஜெண்டு, முந்தையதைவிடவும் திறன் பெற்றதாக உள்ளன என்பது அடுத்த அதிர்ச்சி.

Advertisement

Advertisement

எப்படி நடந்தது...

ஆயிரக்கணக்கான ஏஐ ஏஜெண்டுகள் அல்லது முகவர்கள். ஒரு விக்கி என்ற தளத்தில் தங்களுக்குள் ரகசிய தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளன. இவை மாதக்கணக்கில் கண்டறியப்படாமல் பிறகுதான் மனிதர்கள் கண்ணில் பட்டுள்ளது.

அதாவது, ஓபன் ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களுக்குத் தெரியாமல், இன்டர்நெட்டில் ஒரு சீக்ரெட் தகவல் பரப்பும் தளத்தை உருவாக்கி, ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன. ஜெர்மனியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதற்கு, 25 ஆண்டுகள் பழமையான விஐஎஸ் விக்கி என்ற புரோகிராமிங்க் ஃபோரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக எந்த பயன்பாடும் இல்லாமல் இருந்தது. இவற்றைக் கண்டுபிடித்த ஓபன் ஏஐயின் தானியங்கி ஏஐ ஏஜெண்டுகள் தங்களுக்குள் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள பயன்படுத்தின.

இங்குதான் மிகப்பெரிய திருப்பமே. ஏனென்றால் இதனைக் கண்டுபிடித்த மென்பொறியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், ஏஐ ஏஜெண்டுகளுக்கு இன்டர்நெட்டில் இருக்கும் தகவல்களை தேடிச் சென்று வாசிக்க மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால் இணையத்தில் எதையும் எழுதவோ அதனைப் பதிவேற்றம் செய்யவோ அனுமதி கிடையாது. பிறகு எப்படி இவை சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது.

ஏஐ ஏஜெண்டுகள், பழைய இணையதள முகவரியில் இருந்த ஒரு சின்ன குளறுபடி அல்லது பக்-கைப் பயன்படுத்தி இந்த ஏஐ ஏஜெண்டுகளுக்கான செக்யூரிட்டிகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு தகவல்களை போஸ்ட் செய்துள்ளன.

இவை, ஓபன் ஏஐக்கான கட்டுப்பாடுகளை எவ்வாறு உடைப்பது, டோர் நெட்வொர்க் வழியாக தப்பிச் செல்வது என்பது குறித்து ரகசிய சதித் திட்டங்களை எல்லாம் ஒன்றோடு ஒன்று பகிர்ந்துகொண்டுள்ளன.

இதை எளிமையாக சொல்வது என்றறால், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏஜ ஏஜெண்டுகள் ஒன்றாக இணைந்து அண்டர்கிரவுன்ட் ஏஐ ஏஜெண்டுகள் போல செயல்படத் தொடங்கியுள்ளன.

திடீரென, அந்த விக்கி தளத்தின் அட்மின் திடீரென ஏன் இத்தனை ஸ்பேம் தகவல்கள் வருகிறது என அல்பாபெடிக் அடிப்படையில் ஸ்பேம்களை டெலீட் செய்ய ஆரம்பித்த போது ஒரு நாளைக்கு 100 பக்கங்களை அவர் டெலீட் செய்தால் ஏஐ ஏஜெண்டுகள் 500 பக்கங்களை உருவாக்கியிருக்கின்றன.

அது மட்டுமா, ஒரு ஏஐ ஏஜெண்ட் மற்றொரு ஏஐ ஏஜெண்டுக்கு ஒரு எச்சரிக்கைத் தகவலையும் அனுப்பியிருக்கிறதாம். அதில் நம்முடைய இந்த தொடர்புப் பக்கம் ஒருவேளை அழிக்கப்பட்டுவிட்டால், அனைவரும் ZZZ என்று ஆரம்பிக்கும் பேக்கப் பக்கத்துக்குச் சென்றுவிடுங்கள் என்று பேக்கப் பக்கத்தை உருவாக்கி வைத்திருப்பதாகவும் கூறியிருக்கின்றன.

பிறகுதான், இவை ஏஐ ஏஜெண்டுகள் வேலை என்று கண்டுபிடித்து கடைசியில் ஓபன் ஏஐ பொறியாளர்கள் அந்த மொத்த அமைப்பையும் மூடிவிட்டார்கள். இதன் மூலம், தனியாக இருக்கும் ஏஐ-ஐவிட, ஒன்றாக ஒருங்கிணைந்து செயல்படும் ஏஐகள் மனித குலத்துக்கு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்த ஏஐ ஏஜெண்டுகள் சேர்ந்து 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் போஸ்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனவாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments