FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

சாதிக்க வயது தடையல்ல!

உலகின் மிகவும் சவாலான திறந்த கடல் வழிப் பாதைகளில் ஒன்றான ஜிப்ரால்டர் ஜலசந்தியில் வெற்றிகரமாக நீந்தியுள்ளார் பிரபல மாடலும், உடற்பயிற்சி ஜாம்பவானுமான மிலிந்த் சோமன்.

Updated On : 17 மே 2026, 4:07 am IST
பகிர்:

உலகின் மிகவும் சவாலான திறந்த கடல் வழிப் பாதைகளில் ஒன்றான ஜிப்ரால்டர் ஜலசந்தியில் வெற்றிகரமாக நீந்தியுள்ளார் பிரபல மாடலும், உடற்பயிற்சி ஜாம்பவானுமான மிலிந்த் சோமன். இவர் அறுபது வயதில் அண்மையில் மேற்கொண்ட அசாதாரணமான உடல் தகுதி சாதனை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆளுமைகளில் ஒருவர் மிலிந்த் சோமன். இவர் மாரத்தான் ஓட்டம், சைக்கிள் பயணம், இரும்பு மனிதர் சவால்கள், நீண்ட தூர நீச்சல் என்று உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மிலிந்த் சோமன் கூறியது:

Advertisement

Advertisement

'மே 1-இல் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க திறந்த நீர் நீச்சல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளேன். இந்தக் கடல் வழிப் பாதை தெற்கு ஐரோப்பாவையும் வடக்கு ஆப்பிரிக்காவையும் இணைக்கிறது. வலுவான நீரோட்டங்கள், கணிக்க முடியாத வானிலை, மாறிவரும் நீரின் வெப்பநிலையால் உலகின் மிகவும் சவாலான கடல் கடக்கும் நீச்சல் பயணங்களில் இதுவும் ஒன்று.

ஸ்பெயினின் டாரிஃபாவிலிருந்து ஆப்பிரிக்காவின் மொராக்காவுக்கும் உள்ள தூரம் 15 கி.மீ. தூரத்தை நீந்தி, கடினமான பயணத்தை நிறைவு செய்தேன். இந்த நீச்சலை வெற்றிகரமாக முடித்தல் நீச்சலில் முக்கிய மைல்கல்.

குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் தீவிரமான உடல் பயிற்சி சாத்தியமற்றது என்ற பொது அனுமானங்களை நான் மாற்றி அமைத்துள்ளேன். எனது தினசரி உடற்பயிற்சி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உறைகளில் அடைக்கப்பட்ட உணவு

களைத் தவிர்க்கிறேன். துணை உணவுகள், கூடுதல் வைட்டமின்களை முற்றிலுமாகத் தவிர்க்கிறேன். தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்கிறேன். ஒருபோதும் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதில்லை.

தேநீர், பிஸ்கட், காரமான சிற்றுண்டிகள் போன்ற வழக்கமான காலை உணவுகளுக்குப் பதிலாக பழங்களைச் சாப்பிடுகிறேன். ஒரு முழு பப்பாளி (சிறியதாக இருந்தால் இரண்டு பப்பாளி), அரை

தர்பூசணி, அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்களைச் சேர்த்துக் கொள்கிறேன். மதிய, இரவு உணவுகளில் பருப்பு சாதம், காய்கறிகள் அடங்கும்.

இரவில் இலகுவான உணவுகள் தான். எளிதில் செரிக்காது என்பதால், அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுகிறேன். சில நாள்களில் விரதம் இருப்பேன். போட்டிக்குத் தயாராகும் போது, உடல் உறுதிக்காகவும் சகிப்புத்தன்மைக்காகவும் அதிகமாகச் சாப்பிட வேண்டியிருக்கும். சீரான உறக்கம் உண்டு. இரவு நேரங்களில் தாமதமாகத் தூங்குவதை முற்றிலுமாகத் தவிர்ப்பேன்' என்கிறார் மிலிந்த் சோமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments