FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உடலுக்கு பலம் சேர்க்கும் வெள்ளரி!

கொழுத்த சரீரமுள்ளவர்கள் சதை குறைந்து ஒல்லியாகக் காட்சியளிக்க, காலையில் ஒரு டம்ளர் அளவு வெள்ளரிச் சாறு அருந்தலாம்.

30 ஜனவரி 2024, 6:21 pm IST
பகிர்:
  • கொழுத்த சரீரமுள்ளவர்கள் சதை குறைந்து ஒல்லியாகக் காட்சியளிக்க, காலையில் ஒரு டம்ளர் அளவு வெள்ளரிச் சாறு அருந்தலாம்.
  • மதிய உணவில் வெள்ளரிக்காய்த்துண்டுகளைத் தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். பெரிய வெள்ளரிக்காயை மிக்ஸி மூலம் சாறாக மாற்றியும் அருந்தலாம். மதிய உணவில் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ அல்லது பச்சடியாகவோ சாப்பிடலாம்.
  • மேனிக்கு பொன்நிறத்தைக் கொடுக்கும் சிலிகான் உப்பு, ஒவ்வோர் உயிர்செல்லையும் வலிமையாகப் பிணைத்து வைக்கிறது. இதனால் முதுமையிலும் கட்டுடலாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்நாள் தொடரும். தசை நார் வலிமையுடன் நீடிக்க சிலிகான் உப்பு தேவை. குதிகாலைப் பிணைக்கும் தசை, குருத்தெலும்பு மற்றும் எலும்பு -இவையெல்லாம் ஆரோக்கியமாகவும், தசை நார்கள் உறுதியாக இருக்கவும் வெள்ளரிக்காயிலுள்ள சிலிகான் உப்பு உதவுகிறது.
  • வெள்ளரிக்காயிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து முதலியவை ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தி, பக்கவாதத்தைத் தடுத்து விடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments