FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீல் மேக்கர் குழம்பு

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து கொள்ளவும்.

2 பிப்ரவரி 2026, 1:49 pm IST
மீல் மேக்கர் குழம்பு
பகிர்:

நாகஜோதி கிருஷ்ணன்

தேவையான பொருள்கள்:

சோயா உருண்டைகள் -

Advertisement

Advertisement

முக்கால் கிண்ணம்

வெங்காயம் - 1

தக்காளி - 3

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

வறுத்துப் பொடித்த சீரகம் - 2 தேக்கரண்டி

கொத்துமல்லி, கறிவேப்பிலை -

சிறிதளவு

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி

சோம்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேஜை கரண்டி

மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளைச் சேர்த்து வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்) விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments