பாரதி வாழ்க்கையிலே...
'மகாகவி பாரதியார்' என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்ட அதே பொழுதில், கதை- கட்டுரைகள் எழுதிப் பத்திரிகையாளர் என்றும் பல்வேறு துறைகளிலும் முத்திரையையும் பதிவு செய்தவர் ஆவார்.
சீனி விசுவநாதன்
'மகாகவி பாரதியார்' என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்ட அதே பொழுதில், கதை- கட்டுரைகள் எழுதிப் பத்திரிகையாளர் என்றும் பல்வேறு துறைகளிலும் முத்திரையையும் பதிவு செய்தவர் ஆவார்.
இவ்வாறாகப் பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிலையிலும், தினமும் 'நாட்குறிப்பு' எழுதும் பழக்கத்தைப் பாரதி மேற்கொண்டிருந்தார் என்பது பலரும் அறியாத செய்தியாகும்.
Advertisement
Advertisement
தற்காலத்தில் 'நாட்குறிப்பு' (டைரி) எழுதும் வழக்கம் ஒருசிலரிடையேதான் காணப்படுகிறது.
ஆனால், பாரதியோ தம்முடைய வாழ்நாள் முழுவதும் தம்முடைய பல்வேறு பணிகளுக்கு இடையேயும் தவறாமல், தினமும் 'நாட்குறிப்பு' எழுதி வந்தார் என்பது மிகவும் வியப்பான செய்தியாகும்.
18.09.1920-ஆம் தேதிய நாட்குறிப்பில் 'ஒரு சலவைக்காரன் கணக்கு' என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். சொல்லப் போனால், பாரதியின் கள்ளமில்லாத உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும் 'நாட்குறிப்பு' இதுவாகும். பாரதி 'உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்றும்' எழுத முற்பட்டதில்லை என்பதும் புலப்படுகிறது.
'ஓம் சக்தி' என்ற தலைப்புடன்தான் பாரதி எழுதுவார். ( பார்க்க அட்டவணை) பாரதி இரண்டாம் முறையாகச் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது சென்னை தம்புச்செட்டித் தெருவில் வாசம் செய்தார். இதன் பின், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலும் குடியேறினார்.
தம்புச்செட்டித் தெருவில் வசித்து வந்தபோது இவருடைய துணிகளைச் சலவை செய்து வந்தவரைப் 'பழையவன்' என்றும், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவரைப் 'புதியவன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாரதி சலவைக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை சொற்பமான தொகையே என்றாலும் அதைக்கூடக் கொடுக்க முடியாமல், பாக்கி சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார். இந்தத் தகவலைக்கூட பாரதி மறைக்கவில்லை.
பாரதியின் இளைய சகோதரர் சி.விஸ்வநாத ஐயர் 'கலைமகள்' மாதப் பத்திரிகையில், 1967 ஆகஸ்ட் மாத இதழில் 'பாரதியாரின் வாழ்க்கையில்' என்பதாகத் தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியாகச் 'சலவைக்காரன் கணக்கு' விவரமும் இடம்பெற்றது.
பாரதியின் இளைய சகோதரர் சி.விஸ்வநாத ஐயரின் முதலாம் ஆண்டு நினைவாகக் 'கவி பிறந்த கதை' என்னும் நூலை பாலாஜி புத்தக நிலையம் வெளியிட்ட போது, இந்த சலவைக்காரன் கணக்கும் இடம் பெற்றது.
ஓம் சக்தி புதியவன் கணக்கு-18 செப். 1920
பழைய பாக்கி 0-15-0
வேஷ்டி மல் 1
கரை வேஷ்டி 1
தலைத் துவட்டி 1
(சிறிய) தலைத் துவட்டி 1
ஷர்ட் 1
கோட் 1
பாப்பா பாவாடை 1
ஷர்ட் 2
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.