FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வறுமையிலும் பொறுமை

தான் அழியவே நேர்ந்தாலும் அதனை நீக்கிக் கொள்ளும் பொருட்டு மேலோர்களுக்குக் கேடு செய்வதை ஒருவன் எண்ணாதிருப்பானாக.

11 அக்டோபர் 2026, 5:31 pm IST
பகிர்:

தான்கெடினும், தக்கார்கேடு எண்ணற்க! தன்னுடம்பின்

ஊன்கெடினும், உண்ணார்கைத்து உண்ணற்க!-வான்கவிந்த

வையகம் எல்லாம் பெறினும், உரையற்க,

Advertisement

Advertisement

பொய்யோடு இடைமிடைந்த சொல்!

(பாடல் 80 அதிகாரம்: பொறை உடைமை)

தான் அழியவே நேர்ந்தாலும் அதனை நீக்கிக் கொள்ளும் பொருட்டு மேலோர்களுக்குக் கேடு செய்வதை ஒருவன் எண்ணாதிருப்பானாக. தன் உடம்பின் ஊனே வற்றி, உடலே அதனால் அழிவதானாலும், உண்ணத்தகாதவர் கையிலிருந்து கிடைக்கும் உணவை ஒருவன் ஒருபோதும் உண்ணாதிருப்பானாக. வானம் கவிந்துள்ள உலகம் அனைத்துமே பெறுவதாயிருந்தாலும், பொய் இடையிடையிலே கலந்த சொல்லை, ஒருவன் என்றுமே சொல்லாதிருப்பானாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments