FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆங்கிலச் சிறை அதிகாரி அறிந்த காஞ்சி மகான்

காஞ்சி மஹாஸ்வாமிகளைப் பற்றி ஓர் ஆங்கிலச் சிறை அதிகாரி தம் நாட்குறிப்பில் இப்படி எழுதியிருக்கிறார்:

30 ஜனவரி 2024, 11:29 pm IST
பகிர்:

காஞ்சி மஹாஸ்வாமிகளைப் பற்றி ஓர் ஆங்கிலச் சிறை அதிகாரி தம் நாட்குறிப்பில் இப்படி எழுதியிருக்கிறார்:  

வருடம் 1935, கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள மிதுனாபூரில் பெரியவர் முகாம். மருத்துவர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பெரியவர் விஜயம் கேள்விப்பட்டு அவரை தரிசிக்க சிறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி கேட்டனர். அதிகாரி ரொம்ப கண்டிப்பானவர். ஆனாலும் அவர்கள் பக்தியை மெச்சி ஒரே ஒரு மணிநேரம் தரிசனத்திற்கு அனுமதி கொடுத்தார். அதாவது மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் பெரியவரை தரிசித்து விட்டுத் திரும்பி விட வேண்டும். அதிகாரியும் அவர்களுடன் வந்தார்.  

Advertisement

Advertisement

கைதிகள் முகாமிற்கு வந்த நேரத்தில் பெரியவர் வழக்கம் போல் மாலை நேர பூஜையில் இருந்தார். மணி ஐந்தே முக்கால் என்று கடிகாரம் காட்டியது. இன்னும் தரிசனம் ஆரம்பித்த பாடே இல்லை. கைதிகள் ஏமாற்றத்துடன் கிளம்ப ஆயுத்தமாகினர். 

அப்போது திடீரென்று மஹான் பூஜை முடிந்து வெளிப்பட்டார். விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு சுதந்திரப் போராட்டக் கைதிகளைப் பார்க்க முற்பட்டார். கைதிகள் ஒருமித்த குரலில் நாடு விரைவில் சுதந்திரம் அடைய வேண்டுமென்ற தங்கள் ஆசையை வெளிப்படுத்தி அதற்கு ஸ்வாமிகள் ஆசிர்வாதம் வேண்டும் என்று வேண்டினர்.  பெரியவாளும் உற்சாகமாகப் பிரார்த்தனை செய்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து நெகிழ்ந்த சிறை அதிகாரி இதைப் பற்றித் தன் குறிப்பில் எழுதுகையில் ""தங்கள் எதிர்காலத்தை உதறிவிட்டு தேசத்திற்காகப் போராட வந்தவர்கள்,

துப்பாக்கியையும் பீரங்கியையும் துச்சமாக மதித்தவர்கள் மஹாஸ்வாமிகள் முன் பெட்டிப்பாம்பாக அமர்ந்திருந்ததையும் அவரிடம் பேசும் போது மகத்தான ஆன்மிகக் கட்டுப்பாடைக் கடைப்பிடித்ததையும் நேரில் கண்டேன். அந்த ஒரு நிமிடத்தில் என் அதிகாரம் எல்லாம் கரைந்து நானும் அதற்குப் பிறகு அன்பையும் பக்தியையும் என் வாழ் நெறியாகக் கொள்ள முடிவெடுத்தேன்'' என்று எழுதினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments