FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா...கவலை தெரிவித்த சீனா

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவரையும் இந்தியா வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2022, 4:36 pm IST
கோப்புப்படம்
பகிர்:

நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் தன்மறைப்பு உரிமை கொள்கைக்கும் அச்சுறுத்தல் அளித்து வரும் சீன செயலிகளை மத்திய அரசு தொடா்ந்து முடக்கி வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில் டிக்டாக், யுசி பிரௌசா் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியது.

ஏற்கெனவே முடக்கப்பட்ட செயலிகளின் நகல்களாக அறியப்பட்ட மேலும் 47 செயலிகள் அதே ஆண்டு ஆகஸ்டில் முடக்கப்பட்டன. 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியது. அந்த ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 267 சீன செயலிகள் முடக்கப்பட்டன.

மேலும் 54 சீன செயலிகளை மத்திய அரசு திங்கள்கிழமை முடக்கியது. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை ஏற்று அச்செயலிகளை மத்திய தகவல்-தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. ஸ்வீட் செல்ஃபி ஹெச்டி, பியூட்டி கேமரா, வைவா விடியோ எடிட்டா், டென்செண்ட் எக்ஸ்ரிவா் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில், செயலிகள் முடக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவரையும் இந்தியா வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க 54 சீன செயலிகள் முடக்கம்

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சீன வர்த்தகத்துறை செய்தித் தொடர்பாளர் காவோ ஃபெங், "இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் நல்ல வளர்ச்சி வேகத்தை பராமரிக்க இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். சீன நிறுவனங்கள் உள்பட அனைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் இந்தியா வெளிப்படையான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் நடத்தும் என நம்புகிறோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments