FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

'ஆப்கனில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும்' - அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கூட்டறிக்கை

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும், பெண்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

Updated On : 25 மார்ச் 2022, 9:03 am IST
பகிர்:

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும், பெண்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின்னர் அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. 

கரோனா காரணமாகவும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் 7 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அன்றைய தினமே மீண்டும் பெண்கள் கல்வி பயில தலிபான்கள் தடை விதித்தனர். 

Advertisement

Advertisement

ஆப்கானிஸ்தானில் 6-ஆம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி பயில அனுமதி கிடையாது என தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகப் போரிட்டபோது பெண்கள் உயா்கல்வி கற்க அனுமதிக்கப்படும் என தலிபான்கள் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

இதுகுறித்து கனடா, பிரான்ஸ், இத்தாலி, நார்வே, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், பெண் கல்வியை மறுக்கும் தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் தலிபான்கள் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பெண் குழந்தைகள் கல்விக்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments