FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உக்ரைன் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

போர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் வந்தடைந்தார் பிரதமர் மோடி.

Updated On : 23 ஆகஸ்ட் 2024, 11:47 am IST
உக்ரைன் வந்தடைந்தார் மோடி
பகிர்:

கீவ் : போர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வந்தடைந்தார்.

உக்ரைன் நாட்டுத் தலைவரை சந்தித்து, நடந்து வரும் போரை அமைதியான முறையில் தீர்க்கும் முன்னெடுப்புகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் மோடி.

Advertisement

Advertisement

மாஸ்கோ சென்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்த ஆறு வார காலத்தில் இன்று உக்ரைனுக்குச் சென்று விளாடிமிர் ஸெலன்ஸ்கியைச் சந்திக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ரஷிய அதிபருடனான சந்திப்பு, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடுமையான விமர்சனத்தைப் பெற்றிருந்த நிலையில், இன்று உக்ரைன் பயணம் அமைந்துள்ளது.

1991ஆம் அண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

புது தில்லியிலிருந்து புதன்கிழமை போலந்து புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கிருந்து குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் நேற்று உக்ரைன் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று காலை அங்கு சென்றடைந்தார். அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவுள்ளாா்.

உக்ரைன் நாட்டின் மீது, ரஷியாவின் படையெடுப்பை இந்தியா இதுவரை வெளிப்படையாக கண்டிக்காத நிலையில், பிரதமா் மோடி உக்ரைன் சென்றிருப்பது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.

உக்ரைனுக்குள் தரைவழியாக நுழைந்தும், வான் வழியாகவும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை நேரடியாகக் கண்டிப்பதை இந்தியா தவிர்த்துவந்த நிலையில், ஆறு வாரங்களுக்கு முன் ரஷியாவுக்குச் சென்று அதிபர் புதினை மோடி சந்தித்துப் பேசியதால் ரஷியாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுகிறதோ என்ற தோற்றம் உருவானது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாட்டுத் தலைவர்களின் விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்தியா, ரஷியாவுக்கு ஆதரவாக இல்லை, நடுநிலையாகவே இருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் வகையில்தான் மோடியின் உக்ரைன் பயணம் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா – உக்ரைன் இரு நாடுகளிடையே தூதரக உறவுகள் எட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைன் செல்கிறார். போலந்தின் இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு ரயில் மூலம் பிரதமர் மோடி உக்ரைன் சென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments