FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்பு: எலான் மஸ்க்

வாரத்தில் 80 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்ய விரும்பும் அமெரிக்கர்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 15 நவம்பர் 2024, 8:21 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

எலான் மஸ்க் தலைமையின்கீழான, அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் (DOGE) தலைமைக்கு தொழிலதிபா் எலான் மஸ்க்கையும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

இந்தத் துறையின் வேலைவாய்ப்புகளை, துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளனர். அறிவிப்பில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, ``எங்களுக்கு அதிகளவிலான பகுதிநேர யோசனையாளர்கள் தேவையில்லை. செலவுக் குறைப்பு வேலைக்கு, வாரத்தில் 80 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்ய விரும்பும் அதிக அறிவாற்றல் மிக்கவர்கள்தான் தேவை. உங்களிடம் அந்த தகுதி இருந்தால், விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

முதலில் விண்ணப்பிக்கும் முதல் ஒரு சதவிகித விண்ணப்பங்களை எலான் மஸ்க்கும், விவேக் ராமசாமியும் நேரடியாக மதிப்பாய்வு செய்யவுள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரசுத் துறைகள் மேற்கொள்ளும் வீண் செலவுகள் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் 6.5 லட்சம் கோடி (சுமார் ரூ.135 லட்சம் கோடி) இழப்பை அவா்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்று கூறிய டிரம்ப், துறையை நிர்வகிக்க எலான் மஸ்க்கையும் விவேக் ராமசாமியையும் நியமித்தார்.

இந்த நிலையில், ``ஒரு நபரின் வேலையை செய்ய 2 பேர் நியமிக்கப்பட்டிருப்பது என்பது எவ்வளவு திறமையானது’’ என்று அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரென் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, எலான் மஸ்க் ``உங்களைப் போன்று, எங்களுக்கு ஊதியம் கிடையாது; அப்படியெனில், இது உண்மையில் மிகவும் திறமையானதுதான். இந்தத் துறை அமெரிக்க மக்களுக்காக பெரிய நன்மைகளைச் செய்யும். இனிவரும் வரலாறு, நீதிபதியாக இருந்து பதில் சொல்லும்’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments