ரஷியா அச்சுறுத்தல்: மத்திய கிழக்கு உக்ரைனில் மக்கள் வெளியேற உத்தரவு!
ரஷியப் படைகள் முன்னேறி வருவதால் உக்ரைனின் டினிப்ரோ பிராந்தியத்தில் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷியப் படைகள் உக்ரைனின் மத்திய-கிழக்கு பகுதியான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில் அங்குள்ள 2,200 குழந்தைகள் உள்பட மக்கள் அனைவரும் வெளியேற உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்தப் பிராந்தியத்தின் முக்கிய நகரான டினிப்ரோவின் கிழக்கே அமைந்துள்ள 16 குடியிருப்புப் பகுதிகளில் மக்களைக் கட்டாயமாக வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை, அப்பகுதி இராணுவ நிர்வாகத்தலைவர் அலெக்சாண்டர் கான்ஷா சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
இதுதொடர்பான பதிவில், "ஒரே மாதத்திற்குள், குழந்தைகளுடன் உள்ள குடும்பங்கள் அனைத்தும் இப்பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் 2,177 குழந்தைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
மேலும், “இங்கிருந்து வெளியேற்றப்படும் மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டு புதிய குடியிருப்புகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியம் ரஷியாவின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.
இப்பிராந்தியத்தின் கிழக்கில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால், கடந்த மாதம் அப்பகுதியில் உக்ரைனின் ராணுவம் சற்றே முன்னேற்றமடைந்ததாக செய்திகள் வெளியாகின.
2026-ல் ரஷியாவின் வேகம் இந்தப் போரில் சற்றே குறைந்திருந்தாலும், 5-வது ஆண்டாக ரஷியாவின் படையெடுப்பு தொடர்வதால், ஆள் பற்றாக்குறை மற்றும் சோர்வு காரணமாக உக்ரைன் ராணுவம் நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உக்ரைனில் கடந்த மாதம் ரஷிய ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ரஷியாவின் முதல் படையெடுப்பில் இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
Russian Threat: Order for people to evacuate Ukraine!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.