இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்களோ எதிரிகளோ அல்ல: சீன அரசு
இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்களோ எதிரிகளோ அல்ல: சீன அரசு
இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்களோ எதிரிகளோ அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி சீன அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சீனோ-இந்திய உறவைப் பற்றி ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் முன்வைத்த கருத்துகளைப் பற்றியும் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் ரஷியா நெருக்கமான உறவைப் பேண எடுக்கும் முயற்சிகள் பற்றியும் சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் திங்கள்கிழமை(ஜூன் 8) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் லின் ஜியான், “தற்போது சீனா - இந்தியா எல்லை நிலவரம் நிலைத்தன்மையுடன் விளங்குகிறது. இரு தரப்பும் சுமுக தொடர்பு வழியைக் கொண்டுள்ளனர்.
சீனாவும் இந்தியாவும் ஒத்துழைப்பு நல்கும் நட்பு நாடுகளே தவிர; போட்டியாளர்களோ எதிரிகளோ அல்ல. இவ்விரு நாடுகளும் ஒருவர் மற்றொருவரின் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளாக திகழ்கின்றனரே தவிர; அச்சுறுத்தலாக விளங்கவில்லை என்ற கண்ணோட்டத்தை சீனாவும் இந்தியாவும் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
இரு தரப்பும் இரு தரப்பு உறவுகளை மூலோபய உயர்நிலையுடனும் தொலைதூரக் கண்ணோட்டத்துடனும் கண்காணித்துக் கையாள வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அத்துடன், ஒத்துழைப்பையும் விரிவாக்க வேண்டும்.
இரு தரப்புக்குமிடையேயான வேற்றுமைகளைப் பொறுப்பாகக் கையாள வேண்டும். சீனா - இந்தியா உறவுகள் மேம்பாட அவற்றை நேர்த்தியாக முன்னோட்டப்படுத்தி இட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.
China Foreign Ministry spokesperson Lin Jian remarks at a media briefing here in response to a question on Russian President Vladimir Putin's comments on Sino-India relations : China and India should stick to the perception that the two countries are cooperative partners, not competitors and rivals, and both countries are opportunities for each other's development, not threats, he said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.