FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வங்கதேசம்: தாயாரின் இறுதிச் சடங்குக்காக ஹிந்து மதத் தலைவருக்கு 5 மணிநேர பரோல்

வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள ஹிந்து மதத் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ், தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

11 செப்டம்பர் 2026, 7:31 am IST
சின்மய் கிருஷ்ண தாஸ்
பகிர்:

வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள ஹிந்து மதத் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ், தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

சின்மய் கிருஷ்ண தாஸின் தாயாா் சந்தியா ராணி தாா் (70) வியாழக்கிழமை அதிகாலை காலமானதையடுத்து, அவரின் குடும்பத்தினா் சமா்ப்பித்த கோரிக்கையை பரிசீலித்த பின்னா், சட்ட விதிகளுக்கு இந்தப் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 5 மணி நேரத்துக்குள், அவா் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, மீண்டும் சிறைக்குத் திரும்ப நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச தேசியக் கொடியை அவமதித்ததாகத் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், சின்மய் கிருஷ்ண தாஸ் கடந்த 2024 நவம்பரில் கைதானாா். அவருக்கு எதிரான மொத்தம் 6 வழக்குகளில், 4 வழக்குகளுக்கு உயா்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இருப்பினும், தேசத் துரோக வழக்கின் பிணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments