டயர் இல்லாமல் தரையிறங்கிய விமானம்! மேற்கூரைகளும் விழுந்தன, பயணிகள் அலறல்! எங்கே, எப்படி?
ஈரானில் டயர் இல்லாமல் தரையிறங்கிய பயணிகள் விமானம் பற்றி...
ஈரானில் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் ஒரு டயர் கழன்று விழுந்ததால் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
ஈரான் நாட்டை மையமாகக் கொண்டு இயக்கப்படும் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் ஒன்று, மஷ்ஹத் நகரிலிருந்து கெர்மன்ஷாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுள்ளது.
இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்துள்ளது. இதனால் விமானத்தின் என்ஜினில் கோளாறு மற்றும் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய விமானி, மஷ்ஹத் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக அவசர தரையிறக்கம் செய்தார்.
விமானத்தின் உட்புற மேற்கூரை சேதம்
என்ஜின் கோளாறு காரணமாக ஏற்பட்ட கடுமையான அதிர்வால் விமானத்தின் உட்புற மேற்கூரைகள், லைட்டுகள், தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த பேக்குகள் போன்றவை சரிந்து பயணிகள் மேலே விழுந்தது.
இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அதில், விமானம் விபத்துக்குள்ளாகப் போவதாக பயந்து பயணிகள் அலறும் சப்தங்களும், பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது.
யாருக்கும் காயம் இல்லை
மஷ்ஹத் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானத்திலிருந்து அனைத்துப் பயணிகளையும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பாக ஈரான் விமானப் போக்குவரத்து துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Plane lands without one tyre! Roof panels fell off, passengers screamed! Where and how?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.