FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சக்திவாய்ந்த ஆயுதத் தொகுப்பை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்

2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனையின் ஒரு பகுதியாக, சக்திவாய்ந்த ஆயுதத் தொகுப்பை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது தொடர்பாக...

16 செப்டம்பர் 2026, 2:51 pm IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஏபி
பகிர்:

வாஷிங்டன்: ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சக்திவாய்ந்த 2,000 பவுண்டு(907 கிலோகிராம்) எடையுள்ள 40 ஆயிரம் ஆயுதத் தொகுப்புகளை இஸ்ரேலுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

காசாவில் பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் காரணமாக, பைடன் நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆயுதத் தொகுப்புகளின் விநியோகத்தை நிறுத்தி வைத்திருந்தது.

ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சக்திவாய்ந்த 2,000 பவுண்டு(907 கிலோகிராம்) எடையுள்ள 40 ஆயிரம் குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஆயுதத் தொகுப்பில் மொத்தம் 40,000 குண்டுகள் (20,000 எம்கே84 மற்றும் 20,000 பிஎல்யு-117 ரகங்கள்) அடங்கும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத இரண்டு அமெரிக்க அதிகாரிகளும், இந்த திட்டம் குறித்து அறிந்த ஒருவரும் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த ஆயுதங்கள் அமெரிக்க வரி செலுத்துவோரின் நிதியைக் கொண்டு வாங்கப்படவுள்ளன. அதாவது, அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு, அந்தப் பணத்தைக் கொண்டு இஸ்ரேல் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதத் தொகுப்புகளை வாங்கும் முறையாகும்.

இஸ்ரேலின் ராணுவத் திறனை மேம்படுத்துவதற்காக டிரம்ப் நிர்வாகம் எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த ஆயுத விற்பனை அமைந்துள்ளது.

காசாவில் நிலவும் மோதலால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் அந்த பகுதி பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஒரு பலவீனமான போர்நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், வன்முறை தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் சூழலில் இந்த ஆயுதத் தொகுப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2023 அக்டோபர் 7 இல் ஹமாஸ் நடத்திய கொடிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேல் காசாவில் போரைத் தொடங்கியதிலிருந்து இந்தத் தனிமைப்படுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையிலான உறவில் சில விரிசல்கள் (குறிப்பாக பிப்ரவரியில் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளுக்குப் பிறகு) இருந்தபோதிலும், அவை அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணியின் நெருக்கத்தைத் தடுக்கவில்லை என்பதை இந்த ஆயுதத் தொகுப்பு விற்பனை உணர்த்துகிறது.

பல ஆண்டுகளாக நெதன்யாகுவுடனான டிரம்ப்பின் உறவு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்து வந்தது. ஜூலை மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்புக்கு முன்னதாக, ஈரான் தொடர்பான மோதல் விவகாரத்தில் நெதன்யாகு மீது டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

2024-இல், பைடன் நிர்வாகம் இந்தக் குண்டுகளின் ஒரு தொகுப்பு விநியோகத்தை நிறுத்தி வைத்திருந்தது; ஆனால் டிரம்ப் மீண்டும் பதவியேற்றபோது அந்தத் தடையை நீக்கினார். கடந்த ஆண்டு, டிரம்ப் நிர்வாகம் வழக்கமான நாடாளுமன்ற ஆய்வு நடைமுறையைத் தவிர்த்துவிட்டு, 35,500-க்கும் மேற்பட்ட குண்டுகள் அடங்கிய சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பு விநியோகத்திற்கு இஸ்ரேலுடன் ஒப்புதல் அளித்தது.

அதன்பின்னர், ஜனவரி மாதத்தில் மொத்தம் 6.67 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஆயுத விற்பனைத் தொகுப்பிற்கும் இஸ்ரேலுக்கு அந்த நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

2,000 பவுண்டு எடை கொண்ட இந்த ஆயுதத் தொகுப்புகளில் பல வகைகள் உள்ளன; சில நிலத்தடி இலக்குகளை ஆழமாக ஊடுருவித் தாக்கும் வகையிலும், மற்றவை தரைக்கு மேலே வெடித்துப் பரவலான சேதத்தை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

காசாவில் எந்த வகையான குண்டுகள் மற்றும் பீரங்கித் தாக்குதல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து இஸ்ரேலிய ராணுவம் மிகக் குறைந்த தகவல்களையே அளித்திருந்தாலும், தாக்குதல் காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள் சிதறல்களை ஆய்வு செய்யும் நிபுணர்கள், அங்கு அமெரிக்கத் தயாரிப்பு குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவே கறுதுகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய சுரங்கப்பாதை வலையமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் இவை பயன்படுத்தப்பட்டாலும், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

அக்டோபர் மாதம் ஒரு பலவீனமான போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து காசாவில் தீவிரமான சண்டைகள் குறைந்திருந்தாலும், இஸ்ரேல் அந்த பகுதியில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது; இதில் செவ்வாய்க்கிழமை வரை இரவு நேரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களும் அடங்கும், இந்த தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகவும், தாக்குதல்களைக் குறைக்குமாறு இஸ்ரேலைக் கேட்டுக்கொள்ளவும், டிரம்பின் மருமகனும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான முக்கிய மத்தியஸ்தருமான ஜாரெட் குஷ்னர் கடந்த மாதம் நெதன்யாகுவைச் சந்தித்திருந்த நிலையிலும் இந்தத் தாக்குதல்கள் தொடர்கின்றன.

போராளிக் குழுக்கள் இஸ்ரேலியப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தியுள்ளன; அந்தத் தாக்குதல்களுக்கும், போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கும் பதிலடியாகவே தங்கள் தாக்குதல்கள் அமைந்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

2023 அக்டோபா் 7 தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காசாவில் நடத்திய தாக்குதல்களில் 73,264-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது; இதில் போர்நிறுத்தத்திற்குப் பிறகு கொல்லப்பட்டவர்களும் அடங்குவர்.

The proposed sale is just the latest in a series of Trump administration steps to improve Israeli's military capacity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments