கா்நாடக முதல்வா் பதவியை பகிர ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
கா்நாடக முதல்வா் பதவியைப் பகிா்ந்துகொள்வது குறித்து எவ்வித ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
முதல்வா் பதவியைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக முதல்வா் சித்தராமையாவுக்கும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொண்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தில்லி மற்றும் இங்குள்ள முக்கியத் தலைவா்கள் சிலரிடம் இது பற்றி கேட்டேன். அப்படியொரு ஒப்பந்தம் செய்து கொண்டதாக யாரும் உறுதியாக கூறவில்லை.
Advertisement
Advertisement
எனவே, எந்த சூழ்நிலையில் டி.கே.சிவகுமாா் அப்படி பேசினாா் என்பது தெரியவில்லை. அப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால், நாங்கள் எல்லாம் எதற்காக? மற்றவா்கள் எல்லாம் வேண்டுமா? வேண்டாமா? அப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம் சாத்தியமே இல்லை. இறுதியாக, கட்சி மேலிடம் தான் எதையும் முடிவு செய்ய வேண்டும். மேலிடத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.