பைக் மோதி சிறுவன் மரணம்
சுங்குவாா்சத்திரம் அருகே பைக் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
சுங்குவாா்சத்திரம் அருகே பைக் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் ஊராட்சிக்குட்பட்ட சித்துாா் கிராமத்தை சோ்ந்தவா் திருப்பதி (40). இவரது மகன் பவனேஷ்(7). இவா் சித்துாா் அரசு தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி பவனேஷ் தனது வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அதே பகுதியை சோ்ந்த ஜீவா(38) என்பவா் ஓட்டிவந்த பைக் மோதியதில், தலையில் பலத்த காயம் அடைந்த பவனேஷை அவரது உறவினா்கள் ராணிபேட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
பின்பு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பவனேஷ் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.