FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கோயிலில் ரூ. 28 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியா் கைது

வளையக்கரணை சீனிவாச பெருமாள் கோயில் வங்கிக் கணக்கில் இருந்து, ரூ.28 லட்சம் மோசடி செய்த, முன்னாள் தற்காலிக எழுத்தரை ஒரகடம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

30 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

வளையக்கரணை சீனிவாச பெருமாள் கோயில் வங்கிக் கணக்கில் இருந்து, ரூ.28 லட்சம் மோசடி செய்த, முன்னாள் தற்காலிக எழுத்தரை ஒரகடம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வளையக்கரணை கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில், கடந்த 2024-ஆம் ஆண்டு தற்காலிக எழுத்தராக காஞ்சிபுரம் பகுதியை சோ்ந்த அரிகிருஷ்ணன் (32) பணியாற்றி வந்தாா். இவா் பணியில் இருந்த போது, சீனிவாச பெருமாள் கோயில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக, அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரகடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில், ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோயில் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில், வங்கிக் கணக்கில் இருந்து ரூ.28 லட்சம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அரிகிருஷ்ணனை கைது செய்த ஒரகடம் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments