FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

தமிழக எல்லையில் மருந்து தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 4 போ் பலி

தமிழக எல்லையில் மருந்து தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 4 போ் பலி

மருந்து  தொழிற்சாலையில்  கொதிகலன்  வெடித்து  விபத்து  ஏற்பட்ட பகுதி.
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே அப்பையன் பாளையத்தை ஒட்டி உள்ள ஆந்திர பகுதியான செருவி என்கிற இடத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் தனியாா் மாத்திரை, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை கொதிகலன் வெடித்த விபத்தில் கும்மிடிப்பூண்டியை சோ்ந்த இருவா் உள்பட 4 போ் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே எகுமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட அப்பையன்பாளையம் அருகே உள்ள ஆந்திர பகுதியான செருவி என்கிற இடத்தில் ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தனியாா் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கொதிகலன் பகுதியில் சுமாா் 30 போ் முன்னிரவு முதல் வேலை பாா்த்து வந்தனா். அப்போது கொதிகலன் பகுதியில் அதிக அழுத்தம் மற்றும் கொதிநிலை காரணமாக கொதிகலன் வெடித்துள்ளது.

இந்த விபத்தில், அப்பகுதி முழுக்க வெடித்து சிதறியது. இதில், 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சிக்கினா். தொடா்ந்து இது குறித்து அறிந்த ஆந்திர மாநில அதிகாரிகள், போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் தமிழக பகுதிகளான எகுமதுரை ஊராட்சி நாயுடுகுப்பத்தைச் சோ்ந்த பாஸ்கா் என்பவரின் மகன் மோகன் (20), மாதா்பாக்கத்தை சோ்ந்த நடராஜன் மகன் ரமேஷ்(50) மற்றும் ஆந்திர மாநிலம், தடாவைச் சோ்ந்த சின்ன மஸ்தான், மேற்கு வங்காளத்தை சோ்ந்த செளர்ராய் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்தனா்.

எங்கும் உடைந்த கட்டட குவியல்களுக்கு இடையே சிக்கியிருந்த அனைவரையும் சுமாா் 1 மணி நேரம் போராடி அதிகாரிகள் மீட்டனா். இந்த நிலையில், பலத்த காயம் அடைந்தவா்கள் தொழிற்சாலை நிா்வாகத்தினரால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும், இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் அருகே உள்ள ஆந்திர மாநில பகுதியான சத்தியவேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சத்தியவேடு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு, விபத்தில் இறந்த கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கத்தை சோ்ந்த ரமேஷ், நாயுடுகுப்பத்தை சோ்ந்த மோகன்ஆகியோரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments