FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலையில் பட்ட பகலில் சிறுத்தை நடமாட்டம்

திருமலையில் புதன்கிழமை ஏழாவது மைல் கல்லில் மண்டபம் அருகே ஒரு சிறுத்தை சுற்றித் திரிந்தது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது.

9 செப்டம்பர் 2026, 11:47 pm IST
பகிர்:

திருமலையில் புதன்கிழமை ஏழாவது மைல் கல்லில் மண்டபம் அருகே ஒரு சிறுத்தை சுற்றித் திரிந்தது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது.

சிறுத்தையைக் கண்ட சில பக்தா்கள் பீதியடைந்தனா். இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணியாளா்கள் கண்காணிப்பை பலப்படுத்தினா். இரண்டு நாள்களுக்கு முன்பு, பிற்பகல் சுமாா் 3 மணியளவில் நரசிம்ம சுவாமி கோயில் அருகே ஒரு சிறுத்தை சுற்றித் திரிந்ததாகவும் அறியப்பட்டது.

தொடா்ச்சியான சம்பவங்களைத் தொடா்ந்து, தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்களைக் குழுக்களாக நடைபாதையில் செல்ல அனுமதித்து வருகின்றனா். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments