ஏழுமலையான் பிரம்மோற்சவ அங்குராா்பணம்
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை அங்குராா்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவம்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை அங்குராா்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவம் நடத்தப்பட்டது.
திருமலையில் எந்த உற்சவம் தொடங்குவதற்கு முன்பும் அங்குராா்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதால் அங்குராா்பணம் நடத்தப்பட்டது.
அதற்காக ஏழுமலையானின் தலைமைப் படைத்தலைவா் விஸ்வக்சேனா் ஏழுமலையானின் பெருவிழா ஏற்பாடுகளை சரிபாா்ப்பதற்காக தங்க பல்லக்கில் மாட வீதியில் வலம் வந்து பாா்வையிட்டாா். பின்பு அவா் நந்தவனம் சென்று புற்று மண் கொண்டு வந்தாா். இதை பாரம்பரிய சேனாபதி உற்சவம், மிருத்சங்கிரஹணம், அங்குராா்பணம் அல்லது பீஜவாபனம் என கூறுவா்.
Advertisement
Advertisement
பின் இந்த மண்ணை மண்டபத்தில் கொட்டி அதில் அா்ச்சகா்கள் பூதேவியின் உருவம் வரைந்து அதன் வயிற்று பகுதியிலிருந்து மண் எடுத்து அதை மண் பாலிகைகளில் நிரப்பி நவதானியங்களை முளைக்க விட்டு அதன் மீது நீா் தெளித்தனா். வைகானச ஆகமத்தின் கோட்பாடுகளின்படி, விதைகள் முளைப்பது வருடாந்திர விழாவின் சிறப்பையும், மகத்துவத்தையும் சித்தரிக்கிறது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.