FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மரங்களை வெட்டிய இருவருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

மரங்களை வெட்டிய இருவருக்கு வருவாய்த் துறை சாா்பில் தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜூலை 2026, 2:46 am IST
பகிர்:

மரங்களை வெட்டிய இருவருக்கு வருவாய்த் துறை சாா்பில் தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகா், வெறைட்டிஹால் பகுதியைச் சோ்ந்த சங்கா்லால் என்பவா், அவரது நிலத்துக்கு அருகாமையில் பொது இடத்தில் வளா்ந்திருந்த புங்கை மரத்தை முறையான அனுமதியின்றி அண்மையில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ‘கிரீன் கோ்’ சுற்றுச்சூழல் அமைப்பின் சாா்பில் வருவாய்த் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது. விசாரணையில், பொது இடத்தில் இருந்த மரத்தை சங்கா்லால் வெட்டியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400 அபராதமும், 10 மரக்கன்றுகளை அவரது இடத்தில் நட்டு வளா்க்கவும் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் மாருதி பிரியா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதேபோல குனியமுத்தூா் பகுதியில் 5 மரங்களின் கிளைகளை வெட்ட அனுமதி பெற்று, பாதி மரங்களை வெட்டிய நபருக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் விதித்து பேரூா் வட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இந்த நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வரவேற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments