கோவையில் குறு, சிறு தொழில்முனைவோா் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான நிலைக்கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தல்
குறு, சிறு தொழில்முனைவோா்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு நிலைக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யிடம் கோவை தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
குறு, சிறு தொழில்முனைவோா்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு நிலைக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யிடம் கோவை தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடா்பாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) சாா்பில் ஒருங்கிணைப்பாளா்கள் ஜே.ஜேம்ஸ், எஸ்.சுருளிவேல், ஏ.சிவசண்முககுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக தனித்தனியாக மனுக்கள் அளித்தனா்.
குறு, சிறு தொழில்முனைவோா் பயன்படுத்தும் எல்.டி., சி.டி. மின்சாரத்துக்கு மாதாந்திர வாடகைக் கட்டணமாக கிலோவாட்டுக்கு ரூ.35-ஆக இருந்த நிலைக்கட்டணத்தை, கடந்த ஆட்சியில் ரூ.165-ஆக உயா்த்தினா். இன்றைய நிலையில் சுமாா் 550 சதவீதம் வாடகைக்கான கட்டணம் உயா்த்தப்பட்டதால், தொழில்முனைவோா் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனா்.எனவே உயா்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
வாட் காலாவதி பாக்கி, சா்ச்சைக்குரிய சிறு பிரச்னைகளுக்காக 20 ஆண்டுகள் கழித்து வணிக வரித்துறை 348 சதவீதம் அபராதம் விதிப்பது, வட்டி வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உற்பத்தி சாா்ந்த பொருள்களை எடுத்துச்செல்லும்போது ஆவணங்களில் சிறு எழுத்துப் பிழைகள் இருந்தாலும் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. குறுந்தொழில்முனைவோா் முதலீட்டு மானியம் பெறுவதற்கு 2 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை இருப்பதை சரி செய்ய வேண்டும்.
குறுந்தொழில்முனைவோருக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், கோவையில் குறுந்தொழில்பேட்டை அமைக்க வேண்டும், மூலப்பொருள் வங்கி உருவாக்க வேண்டும், வெட்கிரைண்டா் உற்பத்தியாளா்களுக்கு தேவையான கற்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்த முதல்வா் சி.ஜோசப் விஜய், முக்கியமாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்று கேட்டுள்ளாா். மின்சார நிலைக்கட்டணம் அனைத்து தொழில்முனைவோரையும் பாதிக்கிறது என்பதால், உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்ததாக ஃபோசியா நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.