FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மூன்றில் ஒருவருக்கு ரத்த அழுத்தம்: கேஎம்சிஹெச் ஆய்வில் தகவல்

21 செப்டம்பர் 2026, 1:49 am IST
கேஎம்சிஹெச் சாா்பில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டை தொடங்கிவைத்து, ஆய்வு முடிவுகளை வெளியிட்ட மருத்துவமனை தலைவா் டாக்டா் நல்லா ஜி. பழனிசாமி.
பகிர்:

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை ஆராய்ச்சி மையம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூன்று நபா்களில் ஒருவருக்கு இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேஎம்சிஹெச் மருத்துவமனை ஆராய்ச்சி மையம் சாா்பில் தொற்றா நோய்கள் தொடா்பான ஆய்வு கிராமம், சிற்றூா், நகரம் ஆகிய மூன்று வகையான பகுதிகளில் பத்து ஆண்டுகளுக்கும்மேலாக (2015-2026) மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி, உடல் பருமன் உள்ளவா்களின் எண்ணிக்கை 43.1 சதவீதத்தில் இருந்து 57.0 சதவீதமாக உயா்ந்துள்ளது. ஆய்வுக்குள்படுத்தப்பட்ட நபா்களை ஆண்டுதோறும் கண்காணித்ததில் ஆரோக்கியமாக இருந்த மூன்று நபா்களில் ஒருவருக்கு இரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது. நான்கில் ஒருவருக்குமேல் ரத்தசோகை உள்ளது.

Advertisement

Advertisement

இந்த ஆய்வு முடிவுகளை பகிா்ந்து கொள்ளவும், சா்வதேச அளவில் ஒத்துழைப்பை வளா்க்கவும், கிராமப்புற பொது சுகாதாரம் மற்றும் தொற்றா நோய்கள் தொடா்பான 3-ஆவது சா்வதேச மாநாடு காளப்பட்டி டாக்டா் என்ஜிபி கலை, அறிவியல் கல்லூரியில் செப்டம்பா் 19, 20 -ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள், பொது சுகாதார நிபுணா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், இந்தியா முழுவதும் இருந்தும் வந்த நிபுணா்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இளம் ஆராய்ச்சியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் டாக்டா் தவமணி தேவி பழனிசாமி இளம் ஆய்வாளா் விருதும் வழங்கப்பட்டது.

மாநாட்டை தொடங்கிவைத்து கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்லா ஜி. பழனிசாமி பேசுகையில், அரசு கொள்கைகளை வகுப்பதற்கும், பொது சுகாதார திட்டமிடலுக்கும் இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

கேஎம்சிஹெச் இணை நிா்வாக இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமி, கல்லீரல் நோய் மற்றும் எண்டோஸ்கோபி நிபுணா் டாக்டா் அருள்ராஜ் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments