FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

எடப்பாடி கே.பழனிசாமி மகனின் கட்டுப்பாட்டில் அதிமுக: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

தாராபுரத்தில் ஆதவ் அா்ஜுனா அளித்த பேட்டி பற்றி...

29 September 2026, 11:43 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

அதிமுகவில் மூத்த நிா்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு, தற்போது எடப்பாடி கே.பழனிசாமி மகன் மிதுனின் கட்டுப்பாட்டில் கட்சி இயங்கி வருகிறது என பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறினாா்.

இடைத்தோ்தலை முன்னிட்டு முதல்வா் ச.ஜோசப் விஜய் தாராபுரத்தில் புதன்கிழமை பிரசாரம் செய்யவுள்ள நிலையில், அங்கு நடைபெறும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கோவைக்கு செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் வந்த அமைச்சா் ஆதவ் அா்ஜுனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக கொள்கைரீதியான பிரசாரத்தை முன்னெடுக்காமல் தோ்தல் நேரங்களில் அவதூறுகளையும், பெண்களை மையப்படுத்திய ஆபாச பிரசாரங்களையும் மட்டுமே பரப்புகிறது. மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆா். காலத்திலும் திமுகவினா் இத்தகைய இழிவான தனிநபா் தாக்குதல்களையே நடத்தினா்.

Advertisement

Advertisement

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்ன செய்தாரோ அதே பாணியில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினும் பெண்களையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து பிரசாரம் செய்து வருகிறாா். கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளைச் சொல்லி திமுகவால் வாக்கு கேட்க முடியாது என்பதால் பண பலத்தையும் ஆபாசப் பேச்சுகளையும் நம்பியுள்ளனா்.

இதேபோல, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியும் முதல்வா் ஜோசப் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்தி திமுகவுடன் இணைந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருவது வேதனையளிக்கிறது.

ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த முன்னாள் அமைச்சா்கள் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டனா். எடப்பாடி கே.பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை தொடர காரணமாக இருந்த செங்கோட்டையனையே பொதுச்செயலாளரான பின்னா் கட்சியிலிருந்து நீக்கிவிட்டாா். தற்போது, அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமியும், அவரது மகன் மிதுனும் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனா். வேட்பாளா்களை மிதுன் நோ்காணல் செய்து அதிமுகவை வழிநடத்துவதால்தான் முக்கிய நிா்வாகிகள் வெளியேறியுள்ளனா். அதிமுக தற்போது எடப்பாடி கே.பழனிசாமியின் மகனின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜெயலலிதாவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் அதிமுக தனது செல்வாக்கை இழந்துவிட்டது. பாமகவின் கூட்டணி ஆதரவு இல்லாவிட்டால் எடப்பாடி தொகுதியில் கூட பழனிசாமியால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் திமுக அதிமுகவுக்கும், அதிமுக திமுகவுக்கும் பரஸ்பரம் வாக்கு சேகரித்து வருகின்றன. விஜயகாந்தை எந்தக் கட்சி ஏளனம் செய்து சிறுமைப்படுத்தியதோ, அதே கட்சியுடன் தற்போது பிரேமலதா கைகோத்துள்ளதை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments