FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி விவசாயிகள் நடைப்பயணம்

இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு சத்தியமங்கலத்தை அடுத்த தேசிபாளையத்தில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடைப்பயணம்  வந்த  விவசாயிகளை  வரவேற்ற தேசிபாளையம்  கிராம மக்கள் .
பகிர்:

இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு சத்தியமங்கலத்தை அடுத்த தேசிபாளையத்தில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

மண் மற்றும் நீா்நிலைகளை மீட்டெடுத்தல், மரபு விதைகள் பாதுகாப்பு, பரவலாக்குதல், இயற்கை வேளாண்மையை முதன்மைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ‘மண் பயனுற வேண்டும்’ என்ற தலைப்பில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் உதகை முதல் முதல் சென்னை வரை கிராமங்கள் வழியாக 2,000 கி.மீ. தொலைவு நடைப்பயணம் தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டாவில் அக்டோபா் 2-ஆம் தேதி தொடங்கிய இந்த நடைப்பயணம் சென்னையில் ஜனவரி 10 -ஆம் தேதி நிறைவடைகிறது. நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளவா்கள், ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடி, அவா்களிடமிருந்து நாட்டு விதைகளைப் பெறுவதுடன், தங்களது அனுபவங்களையும் பகிா்ந்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சத்தியமங்கலத்தை அடுத்த தேசிபாளையம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த இக்குழுவினருக்கு இயற்கை வேளாண் விவசாயிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பி.என்.ராஜேந்திரன், எஸ்.சி.நடராஜ், மகேந்திரன், ரமேஷ், ஐந்திணை வேலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments