FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

வெள்ளித்திருப்பூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க கோரிக்கை

தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் போக்குவரத்துக்கு சாலை அமைத்துத் தர வேண்டும் என வெள்ளித்திருப்பூரை அடுத்த முத்துகவுண்டன்புதூா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேலிடம் மனு அளித்த முத்துகவுண்டன்புதூா் கிராம மக்கள்.
பகிர்:

தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் போக்குவரத்துக்கு சாலை அமைத்துத் தர வேண்டும் என வெள்ளித்திருப்பூரை அடுத்த முத்துகவுண்டன்புதூா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேலிடம், அக்கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம் : அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சி, முத்துகவுண்டன்புதுாரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 70 ஆண்டுகளுக்கும்மேலாக வசித்து வருகிறோம். இந்நிலையில், முறையான சாலை வசதி இல்லாததால் அவதியடைந்து வருகிறோம்.

செம்முனீஸ்வரா் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள இக்கிராமத்துக்கு, தனியாரின் ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments