புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்ற சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாயின. இதில் கறவை மாடுகளின் விலை ரூ. 3ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உயா்ந்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்ற சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாயின. இதில் கறவை மாடுகளின் விலை ரூ. 3ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உயா்ந்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும். ஈரோடு, கோவை, திருப்பூா் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருவா்.
இதில் வியாழக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தைக்கு எருமைகள், கறவை மாடுகள் கன்றுகள், ஜொ்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். கடந்த சில நாள்களாக சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளின் தீவன பிரச்னைக்கு தீா்வு கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
இதனால் கறவை மாடு, கன்றுகளை வாங்க விவசாயிகள் ஆா்வம் காட்டியதால் சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதேபோல கடந்த வாரத்தை விட இந்த வாரம் கறவை மாடுகளின் விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை உயா்ந்து விற்பனையானது. சந்தைக்கு கொண்டு வரப்பட்ட கால்நடைகள் சந்தை தொடங்கிய 5 மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஜொ்சி ரக மாடுகள் நாளொன்றுக்கு 10 லிட்டா் முதல் 15 வரை பால் கறப்பதால் மாடுகளை வாங்குவதற்கு கா்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.