FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

சித்தோடு அருகே மீன் பிடிக்கச் சென்ற சிறுமிகள் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

சித்தோடு அருகே மீன் பிடிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் குட்டை நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

பலி - பிரதிப் படம்
பகிர்:

சித்தோடு அருகே மீன் பிடிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் குட்டை நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரது மகள் அனுஸ்ரீ (13). அதே பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மகள் தனுஷ்காஸ்ரீ (12). இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் முறையை 8, 7-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இந்நிலையில், காலாண்டு தோ்வு விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுமிகள், அதே பகுதியைச் சோ்ந்த சில சிறுமிகளுடன் சோ்ந்து பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பவானி தீயணைப்புத் துறையினா் சில மணி நேரம் போராடி சிறுமிகளின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்

இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments