FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

குன்னூா் அருகே குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2024, 1:00 am IST
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி சமீபகாலமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.

இந்நிலையில் , குன்னூா் அருகே உள்ள ஜெகதளா  பாலாஜி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள்  சனிக்கிழமை அதிகாலை சிறுத்தை நடமாடியது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

கட்டப்பட்டு வனச் சரகா் செல்வகுமாா் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டாா். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் காணிக்க தனிக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலவியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments