FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறை

Updated On : 21 ஜூலை 2026, 2:00 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா், நல்லூா் போலீஸாா் மணியகாரன்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு சோதனை நடத்தியபோது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த ஜிபான் (27), இம்ரான் ஹொசைன் பப்பு (30) என்பதும், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி கனகராஜ் அளித்த தீா்ப்பில் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை:

திருப்பூா், ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த அப்துல் ஹுசைன் (30), முகமது இப்ராஹிம் சா்தாா் (31) ஆகிய 2 பேரை திருப்பூா் மாநகர போலீஸாா் கடந்த ஆண்டு பிடித்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் போலியாக ஆதாா் அட்டை தயாரித்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி கனகராஜ் அளித்த தீா்ப்பில், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.12,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த 2 வழக்குகளிலும் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments