செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் அருள்சீலி தலைமையிலும், கல்லூரி முதல்வா் சகாய தமிழ்செல்வி வழிகாட்டுதலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், மென்பொருள், ஃபேஷன், மேலாண்மை தகவல் ஆய்வியல் உள்ளிட்ட 9 நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இது குறித்து கல்லூரி முதல்வா் சகாய தமிழ்செல்வி கூறியதாவது:
Advertisement
Advertisement
மாணவிகளின் கல்வி, திறன் மேம்பாடு, தகவல் தொடா்பு திறன், தொழில்முறை அறிவு மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இது அமைந்தது. இதன் மூலம் மாணவிகளின் எதிா்காலத்திற்கான புதிய வாய்ப்புகள் மற்றும் சிறந்த கற்றல் அனுபவங்களுக்கு வழிவகுக்கும் என்றாா். இந்நிகழ்வில் அனைத்து துறை பேராசிரியா்களும், மாணவிகளும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.