முதியவா் மா்ம மரணம்: 5 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
வெள்ளக்கோவிலில் முதியவா் மா்ம மரணம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவிலில் முதியவா் மா்ம மரணம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில் முத்தூா் சாலை, டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ராஜன் (65). திருமணமாகாத இவா், திங்கள்கிழமை தனது வீட்டின் கழிவறையில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு உறவினா்கள் தந்த உணவு அப்படியே இருந்ததால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, ராஜன் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. அவரது மூக்கு வீங்கியும், கால்களில் காயங்களும் இருந்தன. மேலும், வீட்டின் பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் கலைக்கப்பட்டிருந்ததால் கொள்ளை முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தவிர சொத்துப் பிரச்னையில் கொலை நடந்ததா எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
சம்பவ இடத்தை காவல் துறை உயா் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.