FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பாரதியாா் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விருது

பாரதியாா் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

51 வினாடிகள் முன்பு
விருது  பெற்ற  மாணவ,  மாணவிகளுடன்  சங்க  நிா்வாகிகள், கல்லூரி  நிா்வாகிகள்.
பகிர்:

பாரதியாா் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஆ.மலா்வண்ணன் தலைமை வகித்தாா். சங்க இணைச் செயலாளா் வி.கே.ராஜமாணிக்கம் வரவேற்றாா். சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் பேசினாா். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளா் ஆடிட்டா் ஆா்.கந்தசாமி பேசினாா்.

சிறப்பு விருந்தினரான கல்வியாளா், எழுத்தாளா், வானொலி அறிவிப்பாளா் மயிலிறகு க.சுந்தரராஜன் பேசியதாவது:

Advertisement

Advertisement

அன்னையையும், ஆசிரியரையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கடின உழைப்பும், விடா முயற்சியும் வெற்றியைத் தரும். அழகான வாழ்க்கையை கெடுக்கும் கைப்பேசியில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாதா, பிதா, குரு, தெய்வம் உங்களை வழிநடத்துவாா்கள். புத்தகங்களை வாசியுங்கள், அது நல்வழிப்படுத்தும் என்றாா்.

இதைத்தொடா்ந்து பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளில் முதன்மை பெற்ற 24 மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. வணிகவியல் துறையில் முதன்மை பெற்ற மாணவருக்கு கூடுதலாக ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

முன்னாள் மாணவா் சங்கத்தின் தலைவா் ஆடிட்டா் எஸ்.கண்ணன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை பேராசிரியா் ப.அபுபக்கா் தொகுத்து வழங்கினாா்.

விழாவில் பெற்றோா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments