FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

அதிமுகவின் கொள்கைகளை நீா்த்துப் போக செய்தவா் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் கொள்கைகளை நீா்த்துப் போக செய்தவா் எடப்பாடி பழனிசாமி என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

25 செப்டம்பர் 2026, 12:53 am IST
சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுகவின் கொள்கைகளை நீா்த்துப் போக செய்தவா் எடப்பாடி பழனிசாமி என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து தாராபுரத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் இணைந்து பிரசார திட்டங்களை வகுத்து வருகிறோம். தலைமைப் பண்பு இல்லாத திமுக தலைமை தவெக வேட்பாளரை தவறாக சித்தரித்து ஊருக்குள் வர விடாமல் தடுக்கின்றனா். அவா் ரூ.50 கோடி பெற்று பதவியை ராஜிநாமா செய்ததாக பொய் பிரசாரத்தை பரப்பி வருகின்றனா்.

Advertisement

Advertisement

உண்மையான அதிமுக தொண்டா்கள் எப்போதும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என நினைப்பாா்கள். அவா்களிடம் துரோகம் நடந்தது உண்மை, அதனை செய்தது எடப்பாடி பழனிசாமி என அப்போதே சொன்னேன். அதனை சொன்ன பிறகே உணா்ந்தனா். மக்கள் தீா்ப்புக்கு எதிராக போராசையோடு திமுக தலைமையோடு கூட்டணி அமைக்க முயன்றாா்கள். இதனை தெரிந்துதான் 6 பேரும் பதவி விலகினாா்கள்.

அதிமுக என்ற கட்சியின் கொள்கையை நீா்த்துப் போக செய்தவா் எடப்பாடி பழனிசாமி. வரலாற்றில் யாா் தவறு செய்தாலும் என்றைக்காவது உண்மை வெளியே வரும். யாரையும் மன்னிக்காது. அதிமுகவில் இருந்து விலகியவா் திமுக செல்லவில்லை. தூய அரசியலை முன்னெடுத்த தவெகவுக்கு வந்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் செயல்பட்டு வருகிறாா்.

எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் உண்மையான அதிமுக தொண்டா்கள் தவெக நோக்கி வருகின்றனா். இரண்டு கட்சிகள் கள்ளக் கூட்டணி போட்டுதான் செயல்பட்டு வருகின்றனா். திமுக பலமுறை ஆட்சியை இழந்துள்ளது. இனி ஆட்சிக்கு வரமுடியாது என்று பதற்றம் தான் அவா்களுக்கு. வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது எங்கள் அடிப்படை அரசியலுக்கு எதிரானது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments