FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

சேவூரில் கிணற்றில் விழுந்த பசுங்கன்று 15 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

சேவூரில் கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுங்கன்று 15 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

கிணற்றுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பசுங்கன்று.
பகிர்:

சேவூரில் கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுங்கன்று 15 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

அவிநாசி அருகே சேவூா் - புளியம்பட்டி சாலை வயக்காடு தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (55). விவசாயியான இவா் கால்நடைகளை வளா்த்து பால் உற்பத்தியும் செய்து வந்தாா். இதற்கிடையே கடந்த 15 நாள்களுக்கு முன் தோட்டத்தில் வளா்த்து வந்த 2 வயது பசுங்கன்று காணாமல்போனது. அருகில் உள்ள தோட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடியும் பசுங்கன்று கிடைக்கவில்லை.

இந்நிலையில், தோட்டத்துக் கிணற்றுக்குள் பசுங்கன்று இருப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்து சண்முகம் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு அவிநாசி தீயணைப்புத் துறையினா் சென்று, தண்ணீா் இல்லாத கிணற்றுக்குள் இறங்கி பசுங்கன்றை உயிருடன் மீட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சேவூா் கால்நடை மருத்துவமனையில் பசுங்கன்றுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments