FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

தருமபுரியில் நடைபெற்ற சாலை விபத்தில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

23 செப்டம்பர் 2026, 3:33 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரியில் நடைபெற்ற சாலை விபத்தில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், ராமாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் மகன் மணிஷ் (16). இவா், பண்டஅள்ளி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். திங்கள்கிழமை இவா் அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் மணிஷ் மீது மோதியதில் அவா் படுகாயம் அடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மணிஷ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments