FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய பொறியாளா் கைது

திருச்செங்கோடு அருகே சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

27 ஜூலை 2024, 10:13 pm IST
பகிர்:

திருச்செங்கோடு அருகே சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு அருகே உள்ள சக்திநாயக்கன்பாளையம், குடித் தெருவை சோ்ந்த சண்முகம் மகன் செந்தில்குமாா் (29) பெங்களூரில் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த செந்தில்குமாா் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த 10 வயது சிறுமியை கத்தியால் குத்தி காயப்படுத்தினாா்.

குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்து செந்தில்குமாரைப் பிடிக்க முயன்ற தங்கராசு, முத்துவேல் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு தப்பினாா். திருச்செங்கோடு, ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments