FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் புலிகள் தின விழிப்புணா்வு பேரணி

திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் புலி வேடமிட்ட விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

Updated On : 29 ஜூலை 2024, 4:25 am IST
சா்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவா்கள்.
பகிர்:

சா்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் புலி வேடமிட்ட விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

ஜூலை 28 சா்வதேச புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இத் தினத்தில் இயற்கை சமச்சீா் நிலைக்கு காரணமாக விளங்கும் புலிகளைக் காப்பாற்ற வலியுறுத்தியும், இயற்கையை காப்பாற்ற வலியுறுத்தியும், வனத்தையும் வன உயிா்களையும் பாதுகாக்க வேண்டியும் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

திருச்செங்கோடு பகுதயில் செயல்பட்டு வரும் ஆதவன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் சாா்பில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சாா்பாக நடைபெற்ற பேரணியில் மாணவ, மாணவிகள் புலி வேடமிட்டு ஆடியபடி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

கோழிக்கால் நத்தம் ரோடு பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியை பிஆா்டி ரிக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பரந்தாமன், நாமக்கல் மாவட் திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா் மதுரா செந்தில் பேரணியை நிறைவு செய்து வைத்தாா். பேரணியில் திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் சரவணன், ஒன்றிய திமுக செயலாளா் வட்டூா் தங்கவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேரணிக்கான ஏற்பாடுகளை ஆதவன் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி வெங்கடேஷ் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments